ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அப்பம் வகைகள்-1


பால் அப்பம்

Festival Samayal (Winner Gourmand World Cookbook Award)சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும்
 ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று 
 பால் அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 
வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )
தேங்காய் - அரை மூடி 
தேங்காய் இளநீர் - தேவையானளவு 
பாண்துண்டுகள் - (2 -3 ) 
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
 உப்பு - தேவையானளவு 
முட்டை - 1 (விரும்பினாள்) 
 ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணைய் - தேவையானளவு 

செய்முறை 

(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர் 
    ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில் 
    ஊறவிடவும். 

 (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் , 
      தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3 
       மணித்தியாலம் ஊறவிடவும்.

 (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
          பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு 
          அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு 
         பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்
         (கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு). 

 (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர் 
       ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு 
      (ஓரளவு நறுவலாக ) அரைக்கவும். 

 (5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும். 
      (அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் 
       சேர்க்கவும் )

 (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில் 
     போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும். 

 (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில் 
       உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில் 
        ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்). 

 (8 ) அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் 
        பாலை அல்லது பசுப்பாலை விட்டு அதில் தேவையான
       அளவு சீனியை (சக்கரையை )போட்டு நன்றாக கரைத்து 
        வைக்கவும் .

 (9)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட 
      குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.

 (10)அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி 
       முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும். 

 (11 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில் 
       அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள 
       சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது 
       நேரம் மூடி வைக்கவும் . 

 (12 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
          இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும். 
         (அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா 
         பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் 
        ஓரளவு தடிப்பாகவும்).

 (13 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
       அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும். 

 (14 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு சீனி (சக்கரை) சேர்த்து 
       கலக்கி வைத்திருக்கும் பாலில் ஒரு தேக்கரண்டி 
      எடுத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி வேக
        விடவும். 

 (15)முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்) 
      தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு 
    அப்பதாட்சியில்இருந்து பால் அப்பத்தை கலற்றிய 
     பின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது 
      முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும். 

(16 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை 
       அப்பத்தையும் செய்துவைக்கவும் 

(17 )அதன்பின்பு ஒருதட்டில் பால் அப்பத்தை
       வைத்து பரிமாறவும். 

கவனிக்க வேண்டியவை 
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகமாக 
       இருக்கும். 

(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய 
         பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை 
          துருவவும் 

(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் 
       (குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் 
        போட்டால் இலகுவாக புளித்துவிடும்) 

(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை 
       இலகுவாக கலற்றி எடுக்கலாம், 

(உ)அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம் 
முறுகலாக இருக்கவேண்டும். ' 

மற்றைய முறை 
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி 
(சிவத்தபச்சை)உபயோகிக்கலாம். 

எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும். 

ஆயத்த நேரம் 
4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.