ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

சங்கீதம் - 1

சங்கீதம் 
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் " "பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்”ஆகும் " கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும் கீதம்தான் சங்கீதம் ஆகும் .இச் சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது அத்துடன் செவிக்கும்மனதிற்கும் இன்பம் தரவல்லது எனவும் இசையின் பெருமையை பலபெரியவர்கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து கூறியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்கள் அனைத்தையும் வசப்படுத்தகூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள் இசையின் பெருமையை எடுத்து காட்டுகின்றன. அதற்கு உதாரணமாக சிவனின் கையில் உடுக்கையும் சரஷ்வதியின் கையில் வீணையும் கண்ணனின் கையில் புல்லங்குழலும் இருப்பதை நாங்கள் காணலாம்.அத்துடன் உடல் நோய்களை மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும் எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை ஒரு முகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.
SaxophoneSaxophone

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.