ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தொடர் மொழிக்கு ஓரு மொழி-1


 ஓரு தொடரில் சொல்லவேண்டிய விடயத்தை ஓரு சொல்லில்பொருள் விளங்குமாறு கூறுவதையே  தொடர் மொழிக்கு ஓரு மொழி என அழைக்கப்படும். 

(1 ) நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட தனிப் பிரதேசம் 

      (தீவு) 


(2)நிகழ்ச்சி ஒன்றை அறிய முதன் முதலாக மேடையேற்றுவது

    (அரங்கேற்றம்)

 

 (3)நூலொன்றுக்கு நூலாசிரியர் அல்லாத வேறு ஒருவரால் எழுதப்படும் உரை 

    (அணிந்துரை) 



(4)ஒரேநேரத்தில் எட்டுவிடயங்களைஅவதானிக்கும் ஆற்றல்படைத்தவன் 

   (அட்டாவதானி) 


(5)வெளிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறைமுகமாக இகழ்ந்தும் பாடுவது 

    (அங்கதம்) 


(6)நிகழ்ச்சி ஒன்றினை மேடை ஏற்றும் முன்னர் சரி/பிழை பார்த்துதிருத்துவது

(ஒத்திகை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.