திங்கள், 21 பிப்ரவரி, 2011

வறை வகைகள் - 2

வெண்டிக்காய் வறை
வெண்டிக்காயில் சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கு மிக மிக தேவையான சகல சத்துக்களும் நிறைந்து உள்ளது . அத்துடன் உண்பதிற்கு மெதுமையானது ஆகும் .

தேவையான பொருட்கள்
நறுக்கியகுருனிவட்டவெண்டிக்காய் - 100 கிராம்
நறுக்கிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - தேவையான அளவு
தேசிக்காய்ச்சாறு - தேவையான அளவு
முட்டை - 2
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
பெருஞ்சீரகம்(சோம்பு ) - 1தேக்கரண்டி
உப்பு - 1 /2தேக்கரண்டி

செய்முறை
(1)அடுப்பில் தாட்சியினை(வாணலியினை )
வைத்து அதில் எண்ணெய் விட்டு
கொதிக்க விடவும்.

(2)எண்ணெய் நன்றாக கொதித்ததும் அதில்
கடுகு, பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய
வெங்காயம் ஆகியவற்றை போட்டு
தாளிக்கவும்.

(3)தாளித்ததன் பின்பு குருனியாகவும் வட்ட
மாகவும் நறுக்கிய வெண்டிக்காயை போட்டு
நன்றாக வதக்கவும்.

(4)நன்றாக வதக்கிய பின்னர் அதில் மிளகாய்
தூளை போட்டு மிளகாய்த்தூளின் பச்சை
வாடை(மணம்) இல்லாமல் போகும் வரை
நன்றாக வதக்கவும்.

(5)நன்றாக வதக்கிய பின்பு அதனுடன் முட்டை
,உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

(6)இவையாவும் சேர்ந்து நன்றாக வதங்கிய
பின்னர் இதனுடன் தேசிக்காய் சாறு
(லெமன் ஜுஸ்) சேர்த்து நன்றாக கலக்கவும்.

(7)இவையாவற்றையும் நன்றாக சேர்த்து
கலக்கிய பின்னர் மூடி அப்படியே 3-5
நிமிடங்கள் வைக்கவும்.

(8) அதன் பின்பு சுத்தமான சுவையான
சத்துக்கள் நிறைந்த வெண்டைக்காய்
வறுவல் தயாராகிவிடும்.

(9)அதன் பின்னர் ஒரு தட்டில் சோறு(சாதம்),
பாண்,இடியப்பம்,பிட்டு இவை யாவற்றில்
ஒன்றை வைத்து அதனுடன் வெண்டிக்காய்
வறுவலை வைத்து பரிமாறவும்.

கவனிக்க வேண்டிய விஷயங்கள்
(1)குருனிவட்டமாக நறுக்கிய வெண்டைக்காய்
(2)எண்ணெயில் வெண்டைக்காய் போட்டு வதக்கவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.