திங்கள், 21 பிப்ரவரி, 2011

வினா விடை

(1)சந்திரனில் காற்று இல்லாதது ஏன் ?
 பூமியின் புவியீர்ப்பு விசையை காட்டிலும் சந்திரனில் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு.பூமியில் புவியீர்ப்பு விசை அதிகமாக இருப்பதினால் தான் பூமி காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்கிறது. ஆனால் சந்திரனில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதினால் தான் சந்திரனால் காற்று மண்டலத்தை இழுத்து பிடித்து வைத்திருக்க முடியவில்லை அதனால் தான் சந்திரனில் காற்று இல்லை.

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தொடர் மொழிக்கு ஓரு மொழி-1


 ஓரு தொடரில் சொல்லவேண்டிய விடயத்தை ஓரு சொல்லில்பொருள் விளங்குமாறு கூறுவதையே  தொடர் மொழிக்கு ஓரு மொழி என அழைக்கப்படும். 

(1 ) நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட தனிப் பிரதேசம் 

      (தீவு) 


(2)நிகழ்ச்சி ஒன்றை அறிய முதன் முதலாக மேடையேற்றுவது

    (அரங்கேற்றம்)

 

 (3)நூலொன்றுக்கு நூலாசிரியர் அல்லாத வேறு ஒருவரால் எழுதப்படும் உரை 

    (அணிந்துரை) 



(4)ஒரேநேரத்தில் எட்டுவிடயங்களைஅவதானிக்கும் ஆற்றல்படைத்தவன் 

   (அட்டாவதானி) 


(5)வெளிப்படைப் பொருளில் புகழ்ந்தும் மறைமுகமாக இகழ்ந்தும் பாடுவது 

    (அங்கதம்) 


(6)நிகழ்ச்சி ஒன்றினை மேடை ஏற்றும் முன்னர் சரி/பிழை பார்த்துதிருத்துவது

(ஒத்திகை)


சங்கீதம் - 1

சங்கீதம் 
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் " "பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது. அதனை ஒலிப்பதால் வருவது சங்க நாதம்”ஆகும் " கழுத்துப் பகுதியான தொண்டையிலிருந்து வரும் கீதம்தான் சங்கீதம் ஆகும் .இச் சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது அத்துடன் செவிக்கும்மனதிற்கும் இன்பம் தரவல்லது எனவும் இசையின் பெருமையை பலபெரியவர்கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து கூறியுள்ளனர்.
மனிதர்கள் மட்டுமன்றி மிருகங்கள் அனைத்தையும் வசப்படுத்தகூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள் இசையின் பெருமையை எடுத்து காட்டுகின்றன. அதற்கு உதாரணமாக சிவனின் கையில் உடுக்கையும் சரஷ்வதியின் கையில் வீணையும் கண்ணனின் கையில் புல்லங்குழலும் இருப்பதை நாங்கள் காணலாம்.அத்துடன் உடல் நோய்களை மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும் எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை ஒரு முகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.
SaxophoneSaxophone

அப்பம் வகைகள்-1


பால் அப்பம்

Festival Samayal (Winner Gourmand World Cookbook Award)சாப்பிடுவதிற்கு எல்லோருக்கும் விரும்பமானதும்
 ,செய்வதற்கு இலகுவானதும் ,கொழுப்பு சத்து 
நிறைந்ததுமான உணவுபொருட்களில் ஒன்று 
 பால் அப்பம் ஆகும்.

தேவையான பொருட்கள் 
வெள்ளைஅரிசி - 1கப் (துருவியது )
தேங்காய் - அரை மூடி 
தேங்காய் இளநீர் - தேவையானளவு 
பாண்துண்டுகள் - (2 -3 ) 
சீனி(சக்கரை)- 1 தேக்கரண்டி
 உப்பு - தேவையானளவு 
முட்டை - 1 (விரும்பினாள்) 
 ஈஸ்ட் - அரை தேக்கரண்டி (விரும்பினால்) 
தண்ணீர் - தேவையானளவு 
எண்ணைய் - தேவையானளவு 

செய்முறை 

(1 )ஒரு பாத்திரத்தில் வெள்ளைஅரிசி, தண்ணீர் 
    ஆகியவற்றை போட்டு 3 மணிநேரம் நீரில் 
    ஊறவிடவும். 

 (2 ) இன்னொரு பாத்திரத்தில் பாண் துண்டுகள் , 
      தேங்காய் இளநீர் ஆகியவற்றை போட்டு 3 
       மணித்தியாலம் ஊறவிடவும்.

 (3 )அரிசி ,பாண் துண்டுகள் ஆகியவை ஊறிய
          பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) சிறிதளவு 
          அரிசி,சிறிதளவு தேங்காய்ப்பூ சிறிதளவு 
         பாண்துண்டு, இப்படியே மாறி மாறி போடவும்
         (கிரைண்டர் கப்பின் முக்கால் பகுதிக்கு). 

 (4 )அதன் பின்பு அதில் சீனி(சக்கரை ),தண்ணீர் 
       ஆகியவற்றை போட்டு அப்ப பதத்திற்கு 
      (ஓரளவு நறுவலாக ) அரைக்கவும். 

 (5 )இப்படியே எல்லாவற்றையும் அரைக்கவும். 
      (அரைத்தவற்றுடன் விரும்பினால் ஈஸ்ட் 
       சேர்க்கவும் )

 (6 )அரைத்தபின்பு இதனைஎடுத்து ஒருபாத்திரத்தில் 
     போட்டுமூடி 4மணித்தியாலத்திற்கு புளிக்கவிடவும். 

 (7 ) 4 மணித்தியாலத்தின் பின்பு புளித்த அப்பமாவில் 
       உப்பு போடவும். (விரும்பினால் அந்த அப்பமாவில் 
        ஒரு முட்டையை உடைத்து போட்டு கலக்கவும்). 

 (8 ) அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு தேங்காய் 
        பாலை அல்லது பசுப்பாலை விட்டு அதில் தேவையான
       அளவு சீனியை (சக்கரையை )போட்டு நன்றாக கரைத்து 
        வைக்கவும் .

 (9)அதன்பின்பு அடுப்பில் ஓரளவு சிறிய அரைவட்ட 
      குழியான தாச்சி(அப்பத்தாச்சி)வைத்து சூடாக்கவும்.

 (10)அப்பதாட்சி சூடான பின்பு அப்பதட்சியின் உட்பகுதி 
       முழுவதும் சிறிதளவு எண்ணையயை தடவவும். 

 (11 )அதன் பின்பு ஒரளவு குழியான ஒரு கரண்டியில் 
       அப்பமாவை எடுத்து அதனை அடுப்பில் உள்ள 
       சூடான அப்பதாட்சியின் உள்ளே ஊற்றி சிறிது 
       நேரம் மூடி வைக்கவும் . 

 (12 )சிறிது நேரத்தின் பின்பு அப்பதாச்சியை அடுப்பில்
          இருந்து எடுத்து அதனை நன்றாக சுற்றவும். 
         (அரை வட்டமாகவும், அப்பதாட்சியின் எல்லா 
         பக்கமும் அப்பமா ஒட்டி பிடிக்ககூடியதாகவும் 
        ஓரளவு தடிப்பாகவும்).

 (13 )அதன் பின்பு அப்பதாட்சியை அடுப்பில் வைத்து
       அதன் மூடியினால் மூடி ஓரளவு வேக வைக்கவும். 

 (14 ) அப்பம் ஓரளவு வேந்த பின்பு சீனி (சக்கரை) சேர்த்து 
       கலக்கி வைத்திருக்கும் பாலில் ஒரு தேக்கரண்டி 
      எடுத்து அதனை அப்பத்தின் நடுவில் ஊற்றி வேக
        விடவும். 

 (15)முட்டை அப்பம் நன்றாகசுட்டதும்(வெந்ததும்) 
      தாட்சியினைஅடுப்பில் இருந்து எடுத்த பின்பு 
    அப்பதாட்சியில்இருந்து பால் அப்பத்தை கலற்றிய 
     பின்பு மேசையில்ஒரு தாளை விரித்து அல்லது 
      முறத்தில்(சுளகில்)அப்பத்தை வைக்கவும். 

(16 )இப்படியே தேவைப்படும் எல்லா முட்டை 
       அப்பத்தையும் செய்துவைக்கவும் 

(17 )அதன்பின்பு ஒருதட்டில் பால் அப்பத்தை
       வைத்து பரிமாறவும். 

கவனிக்க வேண்டியவை 
(அ )சுட்டவுடன் சாப்பிட்டால் சுவை அதிகமாக 
       இருக்கும். 

(ஆ) தேங்காய் இளநீரில் பாண் துண்டுகள்ஊறிய 
         பின்பு , அரிசி, நீரில் ஊறிய பின்பு தேங்காய்யை 
          துருவவும் 

(இ )ஈஸ்ட் போட்டால் மிக விரைவாக புளித்துவிடும் 
       (குளிர்காலத்தில் அப்பம் புளிக்காது ஆனால் ஈஸ்ட் 
        போட்டால் இலகுவாக புளித்துவிடும்) 

(ஈ)முட்டையை மாவுடன் கலந்தால் அப்பத்தை 
       இலகுவாக கலற்றி எடுக்கலாம், 

(உ)அப்பத்தை திருப்பி போடக்கூடாது அப்பம் 
முறுகலாக இருக்கவேண்டும். ' 

மற்றைய முறை 
வெள்ளை அரிசிக்கு பதிலாக பொங்கல் அரிசி 
(சிவத்தபச்சை)உபயோகிக்கலாம். 

எச்சரிக்கை 
சக்கரை,இருதயநோயாளர் வைத்தியரின் 
ஆலோசனைப்படி உண்ணவும். 

ஆயத்த நேரம் 
4 மணித்தியாலம்

சமைக்கும் நேரம் 
1 மணித்தியாலம்

அருஞ்சொற்கள்

  1. திறனாய்வு - விமர்சனம் 
  2. திறைசேரி - அரசாங்க பொக்கிஷம் 
  3. தேற்றம் - கணிதத்தில் நிறுவப்படத்தக்க விதப்புரை 
  4. நிதியம் - நிதியிருப்பு 
  5. நியமனம் - பதவியில் அமர்தல்
  6. செயலாளர் - காரியதரசி 
  7. செயற்குழு - அலுவலர்குழு
  8. தவிசாளர் - அவைத்தலைவர் 
  9. திணைக்களம் - அரசாங்க இலாகா 
  10. திறனாய்வு - விமர்சனம்
  11. கூட்டுறவு - நெருங்கிய உறவு 
  12. சர்வாதிகாரம் - முற்றதிகாரமுடைமை 
  13. ஜனநாயகம் - மக்களாட்சி 
  14. சுற்றுலா - உல்லாசப்பயணம் 
  15. செயலகம் - அரசுபணிநிலையம்
  16. ஏகபோகம் - தனியுரிமை 
  17. ஜந்தொகை - வரவு செலவுக்கணக்கு 
  18. காப்புறுதி - இழப்பீட்டுக்கான உறுதி 
  19. குடிப்பரம்பல் - சனப்பரம்பல் 
  20. குடியரசு - மக்கள் ஆட்சியுடைய நாடு
  21. இலத்திரன் - மின்னணு 
  22. உச்சவரம்பு - மேல் எல்லை 
  23.  உலகாயுதம் - நீர்ச்சுரவாதம் 
  24. ஊழல் -  இலஞ்சம் வாங்குதல் போன்ற கூடாத செயல் 
  25. எடுகோள் - கருதுகோள் 
  26. அறிவியல் - விஞ்ஞானம் 
  27. ஆணைக்குழு - அதிகாரம் பெற்றகுழு 
  28. ஆர்பாட்டம் - எதிர்ப்பு 
  29. இயக்கம் - பொது இலச்சியத்தின் பொருட்டு செயற்படுகை

    Amarar Kalkiyin Ponniyin Selvan Audio Book By Sri (Tamil) - Bagam - 3 - Kolaivaall

    Amarar Kalkiyin Ponniyin Selvan Audio Book By Sri (Tamil) - Bagam - 3 - Kolaivaall


ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்