செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கொண்டைக்கடலை பாயாசம்


தேவையான பொருட்கள் 

கொண்டைக்கடலை - 1 கப் .
சீனி - 2 கப் .
பால் - 2 கப் .
நெய் - 3 தேக்கரண்டி .
ஏலக்காய்(உடைத்தது) - 5 .
 கயூ (முந்திரிப்பருப்பு) - 10.
செய்முறை 
1 .உரலில் அல்லது கிரைண்டரில் (மிக்சியில்)கொடைக்கடலை,தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மெதுமையாக அரைத்துக்கொள்ளவும்.
2 .அடுப்பில் வாணலியை (தாட்சியை)வைத்து அதில் கயூ(முந்திரிபருப்பு);நெய் ஆகியவற்றை போட்டு பொரிக்கவும் .
3 .அடுப்பில் இருந்து வாணலியை (தாட்சியை)இறக்கிய பின்னர் பொரித்தவற்றை வானொலியில்(தாட்சியில்)இருந்து எடுத்துஒரு தட்டில் போட்டு ஆறவிடவும் 
.அதன் பின்பு அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து அதில் அரைத்தகொண்டைக்கடலை, பால் சேர்த்து காச்சவும்.
5 .பால் பொங்கி வந்த பின்பு அதனுடன் சீனியை(சக்கரையை)சேர்த்து காச்சவும் 
6 .இவையாவும் கொதித்த பின்பு உடைத்த ஏலக்காய்,நெய்யில்பொரித்த கயூ(முந்திரிப்பருப்பு)ஆகியவற்றைப் போட்டு அடிப்பிடிக்காமல் நன்றாக கிளறவும் 
7 .அதன் பின்பு அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும்.
 8 .இறக்கிய பின்பு சுத்தமான சுவையான சத்துமிக்க கொண்டைக்கடலை பாயாசம்தயாராகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.